இந்தியா

மழை வெள்ளத்தில் சிக்கிய ரயில்; பயணிகளை தீவிரமாக மீட்கும் முனைப்பில் மகராஷ்டிர அரசு.!

Summary:

maharastira - mahalakshi express - heavy rain flood

 

இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவக்காலம் தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் வெளுத்து வாங்கிய கனமழையால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

இந்நிலையில் கனமழை பெய்த பகுதிகளான பத்லாபூர், வங்கனி இடையே சென்று கொண்டிருந்த மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் வெள்ளத்தில் சிக்கியது. இந்த ரயிலில் சுமார் 700 பயணிகள் வரை பயணம் செய்துள்ளதாக தெரிகிறது.

ஆகவே பயணிகளை பத்திரமாக மீட்க ரயில்வே வாரியமும் மகாராஷ்டிர அரசும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் விமான படை ஆகியவற்றின் உதவியை நாடி உள்ளனர். 

மேலும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 8 படகுகளுடன் வெள்ளத்தில் சிக்கிய ரயிலை அடைந்துள்ளனர். மேலும் பயணிகளின் பாதுகாப்பிற்காக யாரும் ரயிலை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். பயணிகளுக்கு பிஸ்கட், தண்ணீர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வழங்கிய வண்ணம் உள்ளார்கள்.


Advertisement