பேஸ்புக் பழக்கத்தை நம்பி வாட்ஸப்பில் நிர்வாண வீடியோ கால்; ஒருமணிநேரத்தில் நடந்த விபரீதம்.!Maharashtra Women Cheated by sextortion Gang 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையில் வசித்து வரும் பெண்மணி, கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பேஸ்புக்கை பயன்படுத்தியபோது 19 வயது இளைஞரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் நாளடைவில் தங்களின் செல்போன் நம்பரை பரிமாறிக்கொண்டு பேசிவந்த நிலையில், ஒருநாள் இருவரும் தங்களின் ஆசையை தீர்த்துக்கொள்ள வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றி இருக்கின்றனர். 

இளைஞரின் செயலுக்கு முதலில் இளம்பெண்ணும் ஒத்துழைத்த நிலையில், 1 மணிநேரம் வீடியோ கால் தொடர்ந்துள்ளது. ஒருமணிநேரம் கழித்து அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 

பின் சிலமணிநேரத்தில் பெண்ணை டெல்லியில் இருந்து தொடர்பு கொள்வதாக பேசிய மர்ம நபர், பேஸ்புக் காதலனோடு பெண் நிர்வாணமாக இருக்கும் வீடியோ கிடைத்துள்ளது. 

இதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் வேண்டும் என கூறி மிரட்டி இருக்கிறார். இவ்வாறாக பெண்ணிடம் இருந்து ரூ.43 இலட்சம் பறிக்கப்பட்டுள்ளது. 

ஒருகட்டத்தில் தொடர் பணத்தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோபார்கைரானே பகுதியை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். 

இவரை கைது செய்ய செல்லும்போது, உள்ளூர் மக்களும் காவல் துறையினருக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். அதன்பின் தான் காவல் அதிகாரிகளுக்கு கேடி கும்பலின் கைவரிசையில் பெண் சிக்கியது தெரியவந்தது.