வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
அடப்பாவமே.. தாயை மீட்க முடியாத விரக்தியில் தீயில் சிக்கி கருகிய மகன்.. கண்கலங்கவைக்கும் சம்பவம்.!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, கிர்காவ் பகுதியில் உள்ள பழமையான கட்டிடத்தில் 80 வயது தாய் தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்படவே, தாய் கட்டிடத்திற்குள் சிக்கி கொண்டதாக தெரிய வருகிறது.

இதனைத்தொடர்ந்து அவரை மீட்க சென்ற மகன், தாயை மீட்க முடியாததால் அங்கேயே இருந்து பலியாகி இருக்கிறார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்த மீட்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தாய் மற்றும் மகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.