இந்தியா

வாய்ப்பு வேணுமா? அந்த நடிகரோட படுக்கையை பகிரு - சீரியல் நடிகை அதிர்ச்சி புகார்..!

Summary:

வாய்ப்பு வேணுமா? அந்த நடிகரோட படுக்கையை பகிரு - சீரியல் நடிகை அதிர்ச்சி புகார்..!

சீரியல் நடிகையை வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சார்ந்த சீரியல் நடிகை ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "நான் மராட்டிய தொலைக்காட்சியில் ஒளிரப்பாகும் சீரியலில் நடித்து வருகிறேன். 

நடிகர் - நடிகைகளை தேர்வு செய்யும் திரைத்துறையை சார்ந்த ஸ்வப்னில் லோஹண்டே (வயது 35) என்பவர், அந்த தொடரில் நடித்து வரும் நடிகருடன் நான் உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துகிறார். 

மேலும், தன்னுடனமும் உடலுறவு வைத்துக்கொண்டால், எதிர்கால திரைப்பட வாய்ப்புகளை வழங்குவதாக கூறி பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் ஸ்வப்னில் லோஹண்டேவை கைது செய்தனர். 

ஆனால், அவர் நீதிமன்றத்திற்கு சென்று உடனடியாக பெயில் வாங்கி வெளியே வந்துள்ளார். புகாருக்கு உள்ளாகிய நடிகரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.


Advertisement