காதலை ஏற்கமறுத்த 19 வயது கல்லூரி மாணவிக்கு நடுரோட்டில் ஓடஓட அரிவாள் வெட்டு; அதிர்ச்சி சி.சி.டி.வி கேமிரா காட்சிகள் வைரல்.! மாணவி உயிர் ஊசல்.!Maharashtra Pune College Girl Attacked CCTV Visuals Viral 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, இன்று தனது உறவினருடன் கல்லூரிக்கு காலையில் சென்றுகொண்டு இருந்தார். காலை 09:30 மணியளவில், பெருங்கேட் பகுதியில் இவர்கள் சென்றுகொண்டு இருந்தனர்.

அப்போது, இவர்களை இடைமறித்த சாந்தனு லக்ஷ்மன் ஜாதவ் என்ற 22 வயது இளைஞர், தனது கையில் இருந்த கத்தி போன்ற ஆயுதத்தால் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். 

முதலில் வெட்டுக்காயம் அடைந்த இளைஞர் அங்கிருந்து ஓடிவிட, கல்லூரி மாணவியை துரத்தி சென்றவர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சாந்தனுவை சுற்றிவளைத்து பிடித்தனர். 

காயமடைந்த கல்லூரி மாணவி & அவரின் உறவினர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த 19 வயது கல்லூரி மாணவியை சாந்தனு லக்ஷ்மன் ஜாதவ் என்ற இளைஞர் கொலை செய்ய முயற்சித்து அரிவாளால் தாக்குதல் நடத்தியது அம்பலமானது.