13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
#Breaking: வெடிபொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர விபத்து: 9 பேர் பலி., பலர் படுகாயம்.!
மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியில், வெடிபொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று நிறுவனத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், வெடிபொருட்கள் தயாரிப்பின்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வரை 09 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தொழிலாளர்களின் உறவினர்கள், தொழிற்சாலை முன்பு குவிந்துள்ளதால் பரபரப்பு சூழல் உண்டாகியுள்ளது.