பெண் அன்போடு பேசுகிறார் என்றால், அவரை கற்பழிக்க யார் அதிகாரம் கொடுத்தது? - உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்.!

பெண் அன்போடு பேசுகிறார் என்றால், அவரை கற்பழிக்க யார் அதிகாரம் கொடுத்தது? - உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்.!


maharashtra-mumbai-high-court-statement-about-sexual-ab

பாலியல் பலாத்காரம் என்பது உடலினால் ஏற்படும் காயம் மட்டும் அல்ல. அது மனரீதியாகவும் ஏற்படும் காயம் என்று தெரிவித்துள்ள மும்பை உயர்நீதிமன்றம், பெண் ஆணுடன் நெருங்கி பழகுவதால் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த உரிமம் கொடுக்க முடியாது என அதிரடியாக தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை போரிவெலி பகுதியை சார்ந்த 26 வயது இளைஞரின் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது ஆசிட் வீசியது குறித்தும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சாதனா ஜாதவ் அடங்கிய அமர்வில், கடந்த 2016 ஆம் வருடம் வழங்கப்பட்ட சிறப்பு போக்ஸோ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஜிதேந்திர சப்கள் என்பவர் மேல்முறையீடு செய்த மனு விசாரணைக்கு வந்தது. வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு இருந்த ஜிதேந்தருக்கு போக்ஸோ நீதிமன்றம் இரண்டு பிரிவுகளின் கீழ் 10 வருடம், 3 குற்றச்சாட்டில் 5 வருடம் மற்றும் 3 சிறை தண்டனை விதித்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் 17  வயதில், சிறுமியுடன் பழகி வந்த ஜிதேந்தர், அவருடன் நெருங்கி பழகியதாகவும் தெரியவருகிறது. சிறுமியின் குடும்பத்தினர் இதனைகவனித்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், சிறுமி தனது காதலில் இருந்து விலகி பெற்றோர்கள் கூறுவதை கேட்டுள்ளார். 

maharashtra

இதனால் ஆத்திரத்திற்கு உள்ளாகிய ஜிதேந்தர், சிறுமியை துன்புறுத்த தொடங்கியுள்ளார். மேலும், இதுகுறித்து சிறுமி தரப்பில் இரண்டு முறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஒவ்வொரு முறையும் ஜிதேந்தர் எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் எச்.ஐ.ஆர் பதிவு செய்ய முயற்சித்த காரணத்தால் ஆத்திரமடைந்த ஜிதேந்தர், சிறுமியை அழைத்துக்கொண்டு கோரை கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு, சிறுமியின் முகத்தில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். ஆசிட்டின் சில துளிகள் சிறுமியின் வாயிலும் பட்டு, அவர் அதனால் பல மாதங்கள் வரை பேச இயலாமல் இருந்துள்ளார். 

வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்ட நீதிபதி சாதனா ஜாதவ், பாதிக்கப்பட்ட பெண்ணோடு தொடக்கத்தில் ஜிதேந்தர் நெருங்கி இருந்தார் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், அதனை வைத்து மேல்முறையீட்டாளர் பாலியல் ரீதியாக துன்புறுத்த அல்லது சிறுமியின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட உரிமம் வழங்கப்படவில்லை. இந்த குற்றத்தில், மேல்முறையீட்டாளர் ஜிதேந்தருக்கு தண்டனை அதிகரிக்கப்படவேண்டும் என அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. 

maharashtra

பெண்ணின் மீதான பாலியல் வன்கொடுமை என்பது வெறுமனே ஏற்படும் உடல் காயம் மட்டும் கிடையாது. அது பெண்ணின் மனதுக்கும் சம்பந்தப்பட்டது. இந்த காயம் பெண்ணின் பெண்மையை காயப்படுத்துகிறது. பெண் அவரின் வாழ்நாள் முழுவதும் ஆசிட் காயத்தால் அவதிப்பட வேண்டும் என்ற நிலையை குற்றவாளி ஜிதேந்தர் ஏற்படுத்தியுள்ளார். இது பெரும் அதிர்ச்சி தருகிறது. பெண்ணின் உடலில் ஏற்பட்ட சேதம் மற்றும் அதிர்ச்சி நினைவுக்கு பணம் வடிவில் வழங்கப்படும் இழப்பீடு ஈடாகாது. இது அவரது வாழ்க்கையில் மாறாத வடுவாக இருக்கிறது. 

சிறுமியின் மருத்துவ செலவுகளை கருத்தில் கொண்டும், அவரை பாதுகாக்கவும், மருத்துவ சிகிச்சைகளை ஈடு செய்யவும், தந்தைக்கு ஆறுதல் கூறவும் மட்டுமே இழப்பீடு வழங்க இயலும். பணத்தால் அனைத்தையும் ஈடு செய்ய இயலாது. குற்றவாளியின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து, அவரின் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்கிறது. அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் பட்சத்தில், அது ஏற்றுக்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.