"குழந்தை பிறக்க அருவியில் நிர்வாண குளியல்" - மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு கணவன், மாமியார் பயங்கர செயல்.!

"குழந்தை பிறக்க அருவியில் நிர்வாண குளியல்" - மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு கணவன், மாமியார் பயங்கர செயல்.!


maharashtra-mumbai-girl-torture-by-husband-and-mother-i

ஆண் குழந்தை வேண்டுமென்றால் பொது இடத்தில் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என்று போலி மந்திரவாதி கூறியதைக்கேட்டு கணவனும் - மாமியாரும் இளம்பெண்ணை அருவியில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்திய பயங்கரம் நடந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவை சார்ந்த பெண்மணிக்கு திருமணமாகி சில வருடங்களாக குழந்தை இல்லை. பெண்ணின் கணவர் குடும்பத்தினர் குழந்தை பிறந்தால் ஆண் குழந்தையாகவே பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் இருந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், மாமியாருக்கு மந்திரவாதி ஒருவரின் அறிமுகம் கிடைக்கவே, ஆண் குழந்தைக்கான பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் பெண்ணை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர். 

அந்த மந்திரவாதி என்ற மூடனும் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் பொது இடத்தில் இருக்கும் அருவியில் பெண் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என்று கூறியுள்ளான். பெண்மணி அவ்வாறு தன்னால் செய்ய இயலாது என்று கூறியும், கணவரும் - மாமியாருமாக பலமுறை தொல்லை செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பான தகவல் பெண்ணின் உறவினர்களுக்கும் தெரிய வரவே, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் பெண்ணின் கணவர், மாமியார், மந்திரவாதி உட்பட நான்கு பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.