சகோதரியை கொலை செய்து, சடலத்துடன் இருந்த தம்பி.. வீடெல்லாம் இரத்த வெள்ளம்..!

சகோதரியை கொலை செய்து, சடலத்துடன் இருந்த தம்பி.. வீடெல்லாம் இரத்த வெள்ளம்..!


Maharashtra Mumbai Brother Killed Sister Bad Smell Will Alert Police by Neighbors

சண்டையில் நடந்த கொலையை மறைத்து, அழுகிய சடலத்துடன் சில நாட்கள் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் உல்ஹஷ் நகர் பகுதியை சார்ந்தவர் யோகேஷ் மைட்மேல் (வயது 45). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

சமீபத்தில் ஜாமின் பெற்று வெளியே வந்த யோகேஷ், தனது சகோதரி அருணாவின் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே யோகேஷ் - அருணா இடையே வாக்குவாதம் நீடித்து வந்த நிலையில், சம்பவத்தன்று நடைபெற்ற சண்டையில் ஆத்திரமடைந்த யோகேஷ், அருணாவை கூரான ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளார். 

India

இந்த தகவலை வெளியே தெரிவிக்காமல், இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்துடன் யோகேஷ் வீட்டிலேயே இருந்துள்ளார். பின்னர், துர்நாற்றம் வீசத் தொடங்கி அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டிற்குள் சென்று பார்க்கையில் அருணா கொலை செய்யப்பட்டு இருந்ததும் உறுதியானது. அழுகிய நிலையில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.. யோகேஷிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.