7 ஆவது மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை.. கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.!

7 ஆவது மாடியில் இருந்து குதித்து ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை.. கடிதத்தில் அதிர்ச்சி தகவல்.!


Maharashtra Bombay IIT PG Student Suicide from Hostel 7 th Floor

பாம்பே ஐ.ஐ.டியில் பயின்று வந்த இளைஞர் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாம்பே ஐ.ஐ.டியில் பயின்று வந்த மத்திய பிரதேசம் மாநிலத்தை சார்ந்த 26 வயது மாணவர், பி.ஜி பட்டம் பயின்று வந்துள்ளார். இன்று மாணவர் தனது விடுதி அறையில் இருந்த நிலையில், விடுதியின் 7 ஆவது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். 

ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

maharashtra

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்கையில், மாணவர் கைப்பட எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், அவர் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதியுள்ளார். 

கடிதத்தில், "எனக்கு மன அழுத்த பிரச்சனை இருந்தது. மனசோர்வு காரணமாக அதற்கான சிகிச்சையை எடுத்து வந்தேன். அதுதொடர்பான பிரச்சனை தீர்த்தத்தால் தற்கொலை செய்கிறேன்" என தெரிவித்துள்ளார். இதுகுறித்த தொடர் விசாரணை நடந்து வருகிறது.