வீடுவீடாக பெண்களின் உள்ளாடையை குறிவைத்து திருடும் ஆசாமி.. சி.சி.டி.வி கேமிராவில் திகீர் காட்சிகள்.!
பெண்களின் உள்ளாடையை குறி வைத்து திருடும் வினோத திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் அடுக்குமாடி குடியிருப்பானது உள்ளது. இப்பகுதிக்கு நள்ளிரவு நேரத்தில் வரும் மர்ம நபர் ஒருவன், பெண்களின் உள்ளாடையை குறிவைத்து திருடி வந்துள்ளான்.
வீடுகளில் வெளியே உள்ள கொடிக்கம்பிகளில் காய வைக்கப்பட்டுள்ள உள்ளாடைகளை அவன் திருடி அங்கிருந்து செல்கிறான். சம்பவத்தன்று ஒரு பெண்மணி தனது வீட்டில் சிசிடிவி கேமராவை கண்காணிக்கையில் மர்ம ஆசாமியின் நடவடிக்கை உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.