தங்கையை அடித்த சிறுமியை நடுரோட்டில் பளார் விட்டு வெளுத்து வாங்கிய சகோதரி.. வைரலாகும் பகீர் வீடியோ.!

தங்கையை அடித்த சிறுமியை நடுரோட்டில் பளார் விட்டு வெளுத்து வாங்கிய சகோதரி.. வைரலாகும் பகீர் வீடியோ.!


Madhya Pradesh Shivpuri KareraTown Girl Slapped Another Girl Video Goes Viral

தனது தங்கையை பள்ளியில் பயின்று வரும் சிறுமி அடித்ததால், ஆத்திரமடைந்த சகோதரிகள் தங்கையை தாக்கிய சிறுமியை நடுரோட்டில் வைத்து பளார் விட்ட சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டம், கரேரா நகரில் பள்ளிக்கு சென்று வந்த மாணவி ஒருவரை, சக மாணவிகள் வீடியோ எடுத்தவாறு அடிக்கும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இந்த விஷயம் தொடர்பாக விசாரிக்கையில், விடியோவில் அடிவாங்கும் சிறுமி, அடிக்கும் சிறுமியின் சகோதரியை பள்ளியில் வைத்து அடித்துள்ளார். இதுகுறித்து, இளைய சகோதரி தனது அக்காவுக்கு தகவலை தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் அக்கா, தங்கையை அடித்த சிறுமியை பதிலுக்கு அடித்து, தனது தங்கையை விட்டு செருப்பால் அடிக்க வைத்து வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.