அரசியல் இந்தியா

5 மாநில தேர்தலில் தோல்வி.. மொட்டையடித்துக்கொண்ட காங்கிரஸ் தொண்டர்.!

Summary:

5 மாநில தேர்தலில் தோல்வி.. மொட்டையடித்துக்கொண்ட காங்கிரஸ் தொண்டர்.!

உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் 2022 இல், பஞ்சாபை தவிர பிற 5 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைகிறது. காங்கிரஸ் கட்சி இந்த தேர்தல்களில் தோல்விடையந்த நிலையில், காங்கிரஸ் தொண்டர் மொட்டையடித்த சம்பவம் நடந்துள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராஜ்கர்க் மாவட்டம், லக்கன்வாஸ் மண்டலம் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபு சிங் மீனா பணிபுரிகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடும் என ஏங்கி தவித்துள்ளார். 

ஆனால், வெளியான முடிவுகளின்படி அவரது எண்ணத்தில் இடிவிழ, மனமுடைந்துபோன பாபு சிங் மீனா, காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு தனது வருத்தத்தை வெளிப்படுத்துவதாக மொட்டையடித்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக அவர் வீடியோவும் பதிவு செய்துள்ளார். கடந்த 2019 ஆம் வருடம் பாபு சிங் பாஜக தொண்டரிடம் பந்தயம் கட்டி தோல்வி அடைந்ததால் இதனைப்போல ஏற்கனவே மொட்டையடித்துக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement