இந்தியா

மதிய உணவு சாப்பிட்ட 54 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.!

Summary:

மதிய உணவு சாப்பிட்ட 54 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.!

பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயக்கமடைய, மொத்தமாக 54 மாணவ - மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தின்டோரி நகரில் அரசுமேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று பள்ளியின் சத்துணவை 200 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் சாப்பிட்ட நிலையில், அதில் 54 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, ஆசிரியர்கள் அவசர ஊர்தியின் உதவியுடன் மாணாக்கர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக உணவுப்பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement