இந்தியா

12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடல்.. ஜன. 31 வரை ஆன்லைன் கிளாஸ் - அரசு உத்தரவு.!

Summary:

12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடல்.. ஜன. 31 வரை ஆன்லைன் கிளாஸ் - அரசு உத்தரவு.!

1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் ஜன. 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தை பொறுத்த வரையில், நாளொன்றுக்கு அம்மாநிலத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் ஷிவ்ராஜ் சவுகான் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் ஜன. 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது என்றும், இணையவழி வகுப்புகள் பள்ளிகள் சார்பில் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement