இந்தியாவையே அதிர வைத்த வழக்கு.. 22 பயணிகளை கொன்று குவித்த பேருந்து ஓட்டுனருக்கு 190 வருட சிறை தண்டனை.!Madhya Pradesh 2015 May 4 Bus Accident 22 Passengers Died Case Driver Jailed 190 Years Judgement

பேருந்து பயணிகளின் அறிவுரையையும் கேட்காமல் பேருந்தை தறிகெட்டு இயக்கி விபத்தை ஏற்படுத்தி 22 பேர் ஓட்டுனரால் பலியான வழக்கில், குற்றவாளிக்கு 190 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதலா மலைப்பகுதியில், கடந்த 2015 ஆம் வருடம் மே மாதம் 4 ஆம் தேதி தனியார் பேருந்து பயணித்துக்கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் 65 பயணிகள் பயணம் செய்த நிலையில், பெரும்பாலானோர் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவார்கள். 

இந்த பேருந்தை, பேருந்தின் ஓட்டுநராக சம்சுதீன் (வயது 47) என்பவர் இயக்கி சென்ற நிலையில், பேருந்தை தாறுமாறாக இயக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தை மெதுவாக இயக்க அறிவுறுத்தியும், சம்சுதீன் அதனை கேட்கவில்லை.

Madhya pradesh

இந்த நிலையில், கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து தண்ணீர் இல்லாத கால்வாயில் கவிழுந்து தீபடித்து விபத்திற்குள்ளானது. இதனால் பேருந்தின் பயணிகள் அலறிக்கொண்டு வெளியேற முயற்சிக்க, பேருந்தின் ஜன்னலில் கம்பிகள் பொருத்தப்பட்டு இருந்தால் தீயில் கருகி 22 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், பலரும் தீக்காயம் அடைந்தனர். 

இந்த விபத்து தொடர்பான வழக்கு மத்திய பிரதேசம் மாநில உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி பேருந்தை தாறுமாறாக இயக்கிய சம்சுதீனுக்கு 190 வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.