ஊரடங்கால் ஏற்பட்ட பசி..! சாலையில் கொட்டிய பாலை தெரு நாய்களோடு சேர்ந்து பகிர்ந்துகொண்ட ஏழை.! கண்கலங்க வைக்கும் வீடியோ.!

ஊரடங்கால் ஏற்பட்ட பசி..! சாலையில் கொட்டிய பாலை தெரு நாய்களோடு சேர்ந்து பகிர்ந்துகொண்ட ஏழை.! கண்கலங்க வைக்கும் வீடியோ.!



lockdown-impact-man-and-street-dogs-getting-milk-from-r

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், சாலையில் சிந்திய பாலை குடிப்பதில் நாய்களுடன் இனைந்து மனிதனும் ஈடுபடும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றது.

இன்று காலை ஆக்ராவில் உள்ள ராம் பாக் சவ்ராஹா சாலையில் பால் கொண்டு செல்லும் பெரிய கன்டெய்னர் லாரி ஓன்று விபத்துக்கு உள்ளன நிலையில், அந்த லாரியில் இருந்த பால் சாலையில் கொட்டி ஆறுபோல் ஓடியது.

ஊரடங்கு காரணமாக பசியில் திரியும் ரோட்டோர நாய்கள் அந்த பாலை சுவைத்து சுவைத்து குடிக்கிறது. அதேநேரம், அந்த நாய்களுக்கு சற்று தள்ளி அமர்ந்திருக்கும் மனிதர் ஒருவர் அந்த பாலை தனது கைகளால் பானை போன்ற ஒன்றில் அள்ளி அள்ளி ஊற்றுகிறார். உணவுக்காக நாயுடன் சேர்ந்து மனிதனும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றது.

கண்ணுக்கு தெரியாத வைரஸை அழிக்க உலகமே ஒருபுறம் போராடிவரும்நிலையில், கண்ணுக்கு தெரிந்த பசி என்னும் வைரஸ் மக்களை மற்றொரு புறம் வாட்டி வதைத்துவருகிறது.