ஜூன் 30 வரை ஊரடங்கு..! நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது அரசு.!

ஜூன் 30 வரை ஊரடங்கு..! நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது அரசு.!


lock-down-5-in-india

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வரும் ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்தியாவில் நான்காம் கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடையும்நிலையியல் தற்போது ஐந்தாம்கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வரும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் வரும் ஜூன் 8 ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

corono

ஜூன் 8 ஆம் தேதிக்கு பிறகு விடுதிகள், உணவகங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றிக்கு அனுமதி வழக்கங்கப்படலாம் எனவும், அதன்பிறகு இரண்டாம் கட்டமாக பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்தும், மூன்றாம் கட்டமாக திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளம், மெட்ரோ ரயில் போன்றவற்றிக்கு அனுமதி வழங்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.