நிர்பயா குற்றவாளிகளின் கடைசி நிமிடங்கள்..! தனி அறை..! உணவு எடுத்துக்கொள்ளவில்லை..! இழுபறியுடன் முடிந்த வாழ்க்கை.!

நிர்பயா குற்றவாளிகளின் கடைசி நிமிடங்கள்..! தனி அறை..! உணவு எடுத்துக்கொள்ளவில்லை..! இழுபறியுடன் முடிந்த வாழ்க்கை.!


last-minutes-of-nirbhaya-accused-before-hanging

நாட்டையே உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா குற்றிவாளிகள் நான்கு பேருக்கும் இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 6 பேரில், ராம் சிங் என்பவர் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மேலும், 18 வயதுக்குட்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், மீதம் இருந்த அக்‌ஷய் தாக்குர் (31), பவன் குப்தா (25), வினய் சர்மா (26) மற்றும் முகேஷ் சிங் (32) ஆகிய நால்வருக்கும் இன்று அதிகாலை 5 . 30 மணியளவில் டெல்லி திகார் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Nirbhaya

நான்கு பேரும் தூக்கிலிடப்படுவதற்கு சற்று முன் தனி தனி அறையில் தங்கவைக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு, டீ, தண்ணீர் எதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே இரண்டு மூன்று முறை குற்றவாளிகளின் தூக்கு தண்டனை தள்ளிவைக்கப்பட்டநிலையில், தண்டனையைத் தடுத்து நிறுத்தக் கோரி குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் நேற்று இரவு முறையிட்டார். ஆனால், அணைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.