இந்தியா

கணவருக்காக காரில் காத்திருந்த மனைவி! கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த கொடூரம்.

Summary:

Lady killed in Delhi by gun shots

டெல்லியை சேர்ந்தவர் உஷா ராணி. இவர் தனது கணவருக்கு டயாலிசிஸ் செய்வதற்காக நேற்று முன்தினம் காலை 6 . 30 மணி அளவில் கணவருடன் காரில் சென்றுள்ளார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காரை நிப்பாட்டிவிட்டு உஷாவின் கணவர் அருகில் இருந்த கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

இந்நிலையில் காரில் தனியாக அமர்ந்திருந்த உஷா ராணியை திடீரென பைக்கில் வாய்ந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. கோவிலுக்கு சென்றுவிட்டு காருக்கு திரும்பிய உஷா ராணியின் கணவர் மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், உஷா ராணி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார் என்பது குறித்து CCTV காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement