இந்தியா

பெண் மருத்துவர் கொலை வழக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள கொலையாளியின் மனைவி...

Summary:

Lady doctor murder case accused wife is pregnant

பெண் மருத்துவர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு சம்மந்தமாக முகமது பாஷா, நவீன், சிவா, சின்ன கேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கொலையாளிகளின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் மனநிலையை கேட்கும்போது ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. கொலையாளிகளில் ஒருவனின் மனைவி தான் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நானும், எனது கணவரும் காதலித்துதான் திருமணம் செய்துகொண்டதாகவும், தற்போது தான் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவரும் என்னைப்போல் ஒரு பெண்தான், எனது கணவர் தப்பு செய்திருந்தால் அவர் தண்டிக்கப்படவேண்டும் எனவும் அந்த பெண் கூறியுள்ளார்.


Advertisement