
Kushboo tweeted india pm learn from pak pm
நல்லெண்ண அடிப்படையில் இந்திய போா் விமானி அபிநந்தனை நாளை விடுவிப்பதாக தொிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானிடம் இருந்து இந்திய பிரதமா் நரேந்திர மோடி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடா்பாளா் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
Is there anything to learn from @ImranKhanPTI ??? A lesson must for our PM @narendramodi
— KhushbuSundar..A proud INDIAN despite bng a Muslim (@khushsundar) February 28, 2019
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடா்பாளா் குஷ்பு தனது ட்விட்டா் பக்கத்தில வெளியிட்டுள்ள பதிவில், “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் உள்ளதா? நம் பிரதமருக்கு ஒரு பாடம் அவசியம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் பாக்கிஸ்தான் மற்றும் இந்திய பிரதமர்கள் இருவரையுமே குஷ்பு டாக் செய்திருந்தார்.
குஷ்புவின் இந்த கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். "நமது நாட்டின் அரசியல் போட்டிகள் நம் நாட்டிற்குள்ளே இருக்க வேண்டும். மாறாக வெளிநாட்டு பிரமரிடமிருந்து நம் நாட்டு பிரதமர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது மிகவும் கீழ்த்தரமான அரசியல் நோக்கம். முதலில் சமூக வலைத்தளங்களில் எப்படி செயல்பட வேண்டுமென்பதை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும் என்பதற்காக இந்தியாவை விற்று விடாதீர்கள்" என ஒருவர் கோபமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் இதேபோன்று பலரும் குஷ்புவை திட்டி தீர்க்கின்றனர். அதுவும் சரிதானே, "எப்படியும் பெரிய மனிதாபிமானத்துடன் பாக்கிஸ்தான் பிரதமர் நமது ராணுவ விமானியை விடுவிக்கவில்லை. பல்வேறு எதிர்ப்புகளின் காரணமாகவே வேறு வழியில்லாமல் விடுவிக்கிறார். அப்படி உண்மையிலே அவருக்கு மனிதாபிமானம் இருந்தால் பாக்கிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழித்து காட்டட்டுமே" என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement