'ஆட்டோவில் மாடித்தோட்டமா' வாலிபரின் அசத்தல் முயற்சி; குவியும் பாராட்டு.!

முன்பெல்லாம் வீடுகள் கட்டும்போது தோட்டம் அமைப்பதற்கு என்றே வீட்டின் முன் புறமுமோ அல்லது ஓரங்களிலோ இடங்களை விட்டு விட்டு தான் வீடுகள் அமைத்தார்கள். ஆனால் இன்று பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக இருக்கும் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்து கட்டடங்களாக எழும்பி விட்டன.
கிராமப்புறங்களில் வீட்டை சுற்றி தோட்டம் அமைக்கும் பழக்கம் இன்றும் தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஆனால் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் தான் இந்த நிலைமை. இந்நிலையில் மக்கள் தாங்கள் வசிக்கும் வீட்டின் மேல் தளத்திலும் தோட்டம் அமைக்கலாம் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,
கொல்கத்தா நகரில் ஆட்டோ வாகனத்தை இயக்கும் இளைஞர் ஒருவர் புதிய முயற்சியாக தனது ஆட்டோவில் மேல்தளத்தில் தோட்டம் போல ஒரு செப்டப் அமைத்து அதில் "மரங்களை காப்போம்; உயிர்களை காப்போம்" என வங்கமொழியில் எழுதியுள்ளார்.
மக்கள் மத்தியில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தான் இது போன்று செய்துள்ளதாக அந்த ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்தார். இதனை அறிந்த மக்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. மேலும் தங்களது இல்லங்களிலும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.