இளைஞர் கல்லீரலில் 20 செ.மீட்டர் நீள கத்தி! எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது மிரண்டுபோன மருத்துவர்கள்!

இளைஞர் கல்லீரலில் 20 செ.மீட்டர் நீள கத்தி! எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது மிரண்டுபோன மருத்துவர்கள்!


knife in young man liver

ஹரியானா பல்வால் பகுதியைச் சேர்ந்த 28 வயது வாலிபர் தினக்கூலி வேலை செய்து வருகிறார். அவர் கஞ்சா பழக்கம் உடையவர். இந்தநிலையில் கஞ்சா எதுவும் கிடைக்காததால் மனஉளைச்சலில் கத்தி ஒன்றை விழுங்கியுள்ளார். அதனால் அவருக்கு  பசியின்மை மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. 

ஒரு மாதங்களுக்கு பிறகு உடல்நலக் கோளாறால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அவரது வயிற்றில் கல்லீரலில் 20 செ.மீ. நீள கத்தி இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

knife in liver

கல்லீரலில் முழுமையாகப் பதிந்திருந்த கத்தியை அகற்ற மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் ரத்தம் ஏற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுமார் மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப்பின் கத்தியை நீக்கியுள்ளனர்.

இது குறித்து கூறிய மருத்துவர்கள், பித்த நாளம், தமனி மற்றும் நரம்புக்கு மிக நெருக்கமாக கத்தி இருந்ததாக கூறியுள்ளனர். சிறு தவறு நடந்தாலும் நோயாளி இறந்து விடும் நிலை. அதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கல்லீரலில் பதிந்திருந்த கத்தியை அகற்றியதாகவும் தெரிவித்தனர்.