பற்றி எறிந்த உடல்.! தீயில் கருகிய இளைஞர்.! ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றிய இளைஞருக்கு நேர்ந்த கதி.!

Kerala young man commit suicide for police seized his bike


Kerala young man commit suicide for police seized his bike

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றித்திரிந்த வாலிபரின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால், மனமுடைந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் வரும் மே 3 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளிய வரவேண்டாம் என அரசு அறிவுறுத்திவருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரிய நெல்லி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான விஜய பிரகாஷ் என்பவர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் அடிக்கடி தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றியதாக கூறப்படுகிறது.

சாந்தம்பாறை காவல்துறையினர் இவரை பலமுறை எச்சரித்தும் இவர் கேட்பதாக இல்லை. இதனால், போலீசார் சம்மந்தப்பட்ட இளைஞரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளன்னர். இந்த ஆத்திரத்தில் விஜய பிரகாஷ் டீசலை தன் மீது ஊற்றி தீவைத்துக்கொண்டுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து விஜய பிரகாஷை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விஜய பிரகாஷ் உயிர் இழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.