பாட்டிலுக்குள் கருநாக பாம்பு..! குஞ்சு பொரிக்கப்பட்ட 10 கருநாக பாம்பு முட்டைகள்..! கேரளப் பெண் உத்ரா கொலை வழக்கில் அதிர்ச்சி வாக்குமூலம்.!



Kerala women uthra snake murder case update

பாம்பை விட்டு மனைவியை கொலை செய்தவழக்கில் போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா என்ற பெண்ணிற்கும் சூரஜ் என்பவருக்கும் திருமணம் முடிந்தநிலையில் உத்ராவை பாம்பு கடித்து மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.

இதனை அடுத்து சிகிச்சை முடிந்த சில நாட்களில் உத்ராவை மீண்டும் பாம்பு கடிதத்தை அடுத்து அவர் உயிரிழந்தார். வரதட்சணை கொடுமையால் உத்ராவின் கணவர் சூராஜ்தான் உத்ராவை பாம்பைவிட்டு கொலை செய்திருக்கவேண்டும் என உத்ராவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து பணம், நகை போன்றவற்றிற்கு ஆசைப்பட்டு மனைவியை கொலை செய்ததை சூரஜ் போலீசார் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

Kerala uthra murder

சுரேஷ் என்ற பாம்பு பிடிக்கும் நபரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு கருநாக பாம்பை விலைக்கு வாங்கிய சூரஜ், அந்த பாம்பை கண்ணாடி பாட்டிலுக்குள் அடைத்துவைத்து உத்ராவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு,  மனைவிக்கு பழச்சாறு மற்றும் பாயசத்தில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவில் தான் கொட்டுவந்த பாட்டிலை திறந்து பாம்பை உத்ரா மீது ஏவியுள்ளார். அப்போது பாம்பு உத்ராவை இரண்டுமுறை கொத்தியுள்ளது. மனைவி இறந்ததை உறுதி செய்த சூரஜ் எந்த ஒரு சலனமும் இல்லாமல் காலையில் அறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

Kerala uthra murder

இந்நிலையில் பாம்பை வைத்து கொலை செய்ததால் சூரஜ் மற்றும் சுரேஷிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மேலும் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. கேரளாவில் உள்ள ஆற்றிங்கல் என்னும் பகுதியில் வைத்து அந்த கருநாகப் பாம்பை பிடித்ததாக சுரேஷ் கூறியுள்ளார்.

மேலும், அங்கிருந்த 10 கருநாக பாம்பு முட்டைகளையும் சுரேஷ் தனது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். அந்த பாம்பு முட்டைகளை அடைவைத்து குஞ்சு பொரிக்கவைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.