இந்தியா

இளம் பெண்ணை இரண்டுமுறை கொத்திய 2 பாம்புகள்..! யூடியூப் வீடியோ பார்த்து பாம்பாட்டியுடன் சேர்ந்து கணவன் போட்ட பகீர் திட்டம்..!

Summary:

Kerala woman death after second snake bite turns out to be a murder

கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இரண்டுமுறை பாம்பு கடிதத்தில் உயிரிழந்த வழக்கில் மனைவியை திட்டமிட்டே கொலை செய்ததை அவரது கணவர் ஒப்புக்கொண்டார்.

கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் இளம் பெண் உத்ரா. இவருக்கும் சூரஜ் என்ற நபருக்கும் திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன் உத்ராவை பாம்பு கடித்தது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உத்ரா உயிர் தப்பினார்.

இந்நிலையில் பாம்பு கடி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய உத்ராவை மீண்டும் இன்னொரு பாம்பு கடித்தது. இதில் உத்ரா சம்பவ இடத்திலையே உயிர் இழந்தார். வீட்டின் இரடாவது மாடியில், பூட்டப்பட்ட ஏசி அறையில் பாம்பு கடித்து உத்ரா உயிர் இழந்தது அவரது பெற்றோரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து உத்ராவின் கணவர் சூரஜ் மீது உத்ராவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசாரின் கிடுக்குப்புடி விசாரணையில் சூராஜ்தான் அவரது மனைவி உத்ராவை பாம்பை விட்டு கடிக்கவைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதற்காக பாம்பு பிடிக்கும் நபர்களிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கு சூரஜ் இரண்டு விஷ பாம்புகளை வாங்கியதும், பாம்புகளை எப்படி கையாள்வது என சூரஜ் கடந்த மூன்று மாதங்களாக யூடியூபில் வீடியோ பார்த்து கற்றுக்கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சூரஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.


Advertisement