ஒரே நாளில் ஆன் லைன் கிளாஸ் மூலம் பிரபலமான 1 ஆம் வகுப்பு ஆசிரியை..! அசரவைத்த ஸ்வேதா டீச்சர்..! அவர் பாடம் நடத்தும் வீடியோவை பாருங்கள்..!

முதல் நாளிலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் டீச்சர் ஸாயி ஸ்வேதா தீலி என்பவர்.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். இதனால் மாணவர்களின் படிப்பு, பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிள்ளைகளுக்கு படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் கிளாஸ்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கேரள அரசு விக்டரி என்னும் சேனல் மூலம் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் திட்டத்தை கடந்த 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த ஆன்லைன் கிளாஸ்ன் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு தொலைக்காட்சி மூலம் பாடம் சொல்லித்தருகிறார் ஸ்வேதா டீச்சர்.
பூனை போலவே முகத்தை வைத்துக்கொண்டு, கண்களை மூடி திறந்து அவர் கொடுக்கும் எக்ஸ்பிரெஷன்ஸ் பெரியவர்களையும் ரசிக வைக்கிறது. இதன் மூலம் ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளார் ஸ்வேதா டீச்சர்.
அவர் பாடம் நடத்தும் அழகை நீங்களே பாருங்கள். இதோ அந்த வீடியோ.