இந்தியா லைப் ஸ்டைல்

பேருந்தின் பின்னால் ஓடி பார்வையற்றவருக்கு உதவிய பெண்..! வைரலான வீடியோ..! அந்த பெண்ணுக்கு வீடு பரிசு..!!

Summary:

Kerala supriya viral video

பார்வையற்ற ஒருவருக்கு உதவும் வகையில் ஓடிச்சென்று பேருந்தை நிறுத்தி, கண் தெரியாத முதியவரை பேருந்தில் ஏற்றி உதவி செய்த கேரளாவை சேர்ந்த பெண் சுப்ரியாவுக்கு அவர் வேலை செய்யும் நகைக்கடை உரிமையாளர் வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், வயதான பார்வையற்ற ஒருவர் பேருந்தில் ஏற சென்றுகொண்டிருந்தார். அதனை கவனிக்காத பேருந்து ஓட்டுநர் பேருந்தை அங்கிருந்து நகர்த்தினார். இதனை கவனித்துக்கொண்டிருந்த சுப்ரியா என்ற பெண் பேருந்து பின்னால் ஓடிச்சென்று நடத்துனரிடம் விவரத்தை கூறி பின்னர் ஓடிச்சென்று அந்த பார்வையற்ற முதியவரை அழைத்துவந்து பேருந்தில் ஏறச்செய்தார்.

இந்த காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, அந்த பெண்ணின் மனிதாபிமானத்தை பலரும் பாராட்டி கமெண்ட் பதிவிட அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் சுப்ரியா வேலை செய்யும் நகைக்கடை உரிமையாளர் சுப்ரியாவை நேரில் அழைத்து, அவரது மனிதாபிமானத்தை பாராட்டியதோடு வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். தற்போது தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்துவரும் சுப்ரியா சொந்த வீட்டிற்கு விரைவில் குடியேறவுள்ளார்.


Advertisement