வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை நகைக்கு ஆசைப்பட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து செய்த கொடூரம்.. நெஞ்சை உருக்கும் துயர சம்பவத்தின் அதிரடி திருப்பம்.!

வீட்டிற்கு வாழ வந்த பெண்ணை நகைக்கு ஆசைப்பட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து செய்த கொடூரம்.. நெஞ்சை உருக்கும் துயர சம்பவத்தின் அதிரடி திருப்பம்.!



kerala-snakebite-murder-case-soorajs-mother-and-sister-arrested

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை பகுதியை சேர்ந்தவர் சூரஜ் - உத்ரா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் கடந்த மார்ச் 5 ஆம் தேதி உத்ராவை பாம்பு கடித்துள்ளது. அதனையடுத்து மருத்துவமனை அழைத்து சென்ற நிலையில் உத்ரா உயிர் தப்பியுள்ளார்.

அதன்பின் உத்ரா தனது தாய் வீட்டிற்கு கடந்த மே 7 ஆம் தேதி சென்றிருந்த நிலையில் மீண்டும் நல்ல பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் உத்ராவின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் தீவிர விசாரணை செய்ததில் சூரஜ் மாட்டிக்கொண்டுள்ளார்.

KERALA

அதாவது உத்ராவின் 100 பவுன் நகைக்கு ஆசைப்பட்டு உத்ராவின் கணவரே பாம்பை ஏவி விட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இரவு உத்ரா தூக்க செல்லும் முன் அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்துள்ளார் சூரஜ். அதன்பின் பாம்பாட்டியிடமிருந்து வாங்கி வந்த நல்ல பாம்பை விட்டு மனைவியை கடிக்க வைத்ததை அடுத்து தூக்கத்திலேயே உத்ரா பரிதாபமாக உயிரிழந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் சூரஜ். 

அதனையடுத்து போலீசார் சூரஜ் மற்றும் கொலைக்கு உதவியாக இருந்த சூரஜின் தந்தை, பாம்பாட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் புதிய திருப்பமாக இக்கொலைக்கு சூரஜுன் தாய் சூர்யா மற்றும் அவரது தங்கை ரேணுகா ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

கொலை நடந்ததும் அதன் ஆதாரங்களை அழித்தது மட்டுமின்றி உத்ராவின் நகைகளை வீட்டின் பின் புறம் புதைத்து வைத்துள்ளனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, மறைத்து வைத்திருந்த நகையை எடுத்துக் கொடுத்தனர். இதையடுத்து ரேணுகா, சூர்யா ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது, கொலை நடந்ததற்கான ஆதாரத்தை அழித்தது மற்றும் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.