பாம்பு கடித்தபோது உத்ரா ஏன் அலறவில்லை? மனைவியை கடித்த பாம்பு ஏன் கணவனை கடிக்கவில்லை.? அன்று இரவு என்னதான் நடந்தது.?

பாம்பு கடித்தபோது உத்ரா ஏன் அலறவில்லை? மனைவியை கடித்த பாம்பு ஏன் கணவனை கடிக்கவில்லை.? அன்று இரவு என்னதான் நடந்தது.?


kerala-snake-bite-uthra-murder-case-update

கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று கேரளாவை சேர்ந்த இளம் பெண்ணை பாம்பு கடித்து கொன்றது. குறிப்பிட்ட மரணம் சந்தேக மரணம் என்றநிலையில் போலீசார் இறந்தவரின் கணவனை விசாரித்ததில் கணவன்தான் பாம்பை விட்டு கொலை செய்தது தெரியவந்தது.

ஒரே அறையில், ஒரே கட்டிலில் அருகே அருகே இருந்த கணவன் மனைவியில், மனைவியை மட்டும் எப்படி பாம்பு கடித்தது? கணவனை ஏன் பாம்பு சீண்டவில்லை? என்னதான் ஆழ்ந்து தூங்கினாலும் பாம்பு கடித்தால் பயங்கர வலி ஏற்படும் என்பதும், அந்த வலியில் தூக்கத்தில் இருப்பவர் கட்டாயம் எழுந்து அலறுவார் என்பதும் உண்மை.

KERALA

அப்படி இருக்க பாம்பு கடித்தும் உத்ரா ஏன் அலறவில்லை? பாம்பின் விஷம் உடலில் ஏறியதும் கடுமையான இருமல் ஏற்படும் என்கிறார்கள். அப்படியானால் உத்ரா இருமினாரா இல்லையா? இப்படி பல கேள்விகள் விடை தெரியாமல் இருக்க, இவை அனைத்தும் உத்ராவின் கணவன் தீராஜின் பக்கா மாஸ்டர் பிளான் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆம், பாம்புகளை எப்படி கையாள்வது என வீடியோ பார்த்து கற்றுக்கொண்ட உத்ராவின் கணவன், பாம்பு உத்ராவை கடிக்கும்போது வேடிக்கை பார்த்ததோடு மட்டும் இல்லாமல், அவரை பாம்பு சீண்டியதும் தன் அருகில் வராமல் தான் கற்றுக்கொண்ட வித்தையால் பாம்பை விரட்டியுள்ளார்.

மேலும், உத்ராவின் அலறல் சத்தம் தனது வீட்டினருக்கோ, அல்லது அக்கம் பக்கத்தினருக்கோ கேட்டுவிடாதபடி உத்ராவின் கணவன் சூரஜ் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

இப்படி திட்டம் போட்டு கொலை செய்த சூரஜை போலீசார் தீவிரமாக விசாரித்து அனைத்து உண்மைகளையும் வெளியே கொண்டுவர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். இந்த சம்பவம் சூரஜ் போன்ற மற்றவர்களுக்கு உதவியாகிவிடக்கூடாது என்பது மிகவும் அவசியம்.