
kerala poor labour got lottery price
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்தம்பரம்பு பகுதியை சேர்ந்த 55 வயதான ராஜன் என்பவர் தினக்கூலி வேலை செய்துகொண்டே, தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் ராஜன் தனது மூத்த மக்களின் திருமணத்திற்காகவும், வீட்டை புதுப்பிப்பதற்காகவும் வங்கியில் 7 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
ஆனாலும் வீட்டு வேலைகளை முழுவதும் முடிக்க முடியாமல், கடனையும் கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் குடும்ப சுமையை போக்க மீண்டும் கடன் வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது ரூ.300க்கு ஒரு லாட்டரி டிக்கெட் ஒன்றினை வாங்கியுள்ளார்.
தான் லாட்டரி சீட்டு வாங்கியது மனைவிக்கு தெரிந்தால், குடும்பத்தில் பல கஷ்டங்கள் இருக்கும் நிலையில், பணத்தை வீணடித்துவிட்டதாக திட்டுவார் என நினைத்து யாருக்கும் தெரியப்படுத்தாமல் லாட்டரி சீட்டையும் மறைத்து வைத்து வந்துள்ளார். இந்தநிலையில் லாட்டரியின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட போது, எதார்த்தமாக கடைக்கு சென்று தனது லாட்டரி எண்களை சரி பார்த்துள்ளார்.
அப்போது அவருக்கு ரூ.12 கோடி பரிசுத்தொகை கிடைத்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவலறிந்த ராஜனின் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளா அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பல ஏழைகளுக்கு பரிசு விழுந்துள்ளது. ஆனால் குடும்ப கஷ்டத்தில் வாடிய ராஜனின் குடும்பத்திற்கு 12 கோடி பரிசுத்தொகை கிடைத்திருப்பது பலரையும் வியக்கவைத்துள்ளது.
Advertisement
Advertisement