கேரள முன்னாள் முதல்வர் வீட்டில் அடுத்தடுத்து சோகம்; அண்ணனை தொடர்ந்து தங்கையும் இயற்கை எய்தினார்.!

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி நேற்று அதிகாலை உயிரிழந்தார். வயது மூப்பு காரணமாக பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் மறைவு கேரள அரசியலில் பெரும் சோகத்தை தந்தது. பலரும் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். உம்மன் சாந்தியின் சகோதரி தங்கம்மா குரியன் (வயது 94).
கேரளாவின் முன்னாள் எம்.எல்.சி வல்லக்கல் உம்மன் அவர்களின் மகள் தங்கமா சூரியன் ஆவார். தனது சகோதரர் மறைவை அறிந்த சகோதரி, நேற்று மாலை உயிரிழந்தார்.
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்த மரணம் ஏற்பட்டதால் குடும்பத்தினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர்.