இந்தியா

உனக்கு சாகுற வயாசம்மா இது!! படுபாவி இப்படி பண்ணிட்டானே!! இளம் பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த இளைஞன்..!

Summary:

ஒருதலை காதலால் இளம் பெண்ணை சுட்டு கொலை செய்துவிட்டு, இளைஞர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொ

ஒருதலை காதலால் இளம் பெண்ணை சுட்டு கொலை செய்துவிட்டு, இளைஞர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர் மருத்துவ கல்லூரியில் மருத்துவ பயின்றுவந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண்ணை கண்ணூரைச் சேர்ந்த ரக்கீல் என்பவன் இன்ஸ்டாகிராம் மூலம் பின்தொடர்ந்து வந்துள்ளான்.

முதலில் அந்த மாணவியிடம் நட்பாக பழகிவந்த அவன் பின்னர் அவரை காதலிப்பதாக கூறியுள்ளான். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி ரக்கீல் அந்த பெண்ணிற்கு தொல்லைகொடுத்துள்ளான். ஆனாலும் மாணவி தனது முடிவில் இருந்து மாறவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ரக்கீல், மாணவி பயின்றுவரும் கல்லூரியின் விடுதிக்கு வந்து தோழிகளுடன் உணவருந்திய பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். ஒருகட்டத்தில் தான் மறைத்துவைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மாணவியை பலமுறை சுட்டு கொலை செய்துள்ளான். பின்னர் அதே துப்பாக்கியால் தனது தலையில் சுட்டு அவனும் தற்கொலை செய்துகொண்டான்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement