புல்லரிக்கவைக்கும் வீடியோ.. தலை சிதறி சாகவேண்டியவரை ஒருநொடியில் காப்பாற்றிய நபர்..



Kerala man fallen from first floor youth saved him viral video

மாடியில் இருந்து சரிந்துவிழுந்தவரை அருகில் இருந்த நபர் கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள வடகாரா என்ற பகுதியை சேர்ந்தவர் பினு. இவர் வடகாரா பகுதியில் அமைந்துள்ள கிராம வங்கி ஒன்றுக்கு பணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். முதல் மாடியில் இருக்கும் வங்கியில் கூட்டமாக இருந்ததால் பினு வங்கிக்கு வெளியே இருந்த சுவற்றில் சாய்ந்தபடி நின்றுள்ளார்.

அதேநேரம் அவருக்கு அருகில் பாபு என்ற நபரும் அங்கிருந்த கட்டையில் சாய்ந்தவாறு நின்றுகொண்டிருந்தார். அப்போது கட்டையில் சாய்ந்துகொண்டிருந்த பினு திடீரெனெ மயங்கி பின்புறமாக சரிந்துவிழுந்தார். அப்போது அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த பாபு டக்கென சுதாரித்து பினுவின் இரண்டு கால்களையும் பிடித்துக்கொண்டார்.

இதில் உடல் முழுவதும் தலைகீழாக தொங்கியபடி பினு தொங்கிக்கொண்டிருக்க, பாபு அவரது கால்களை பிடித்துக்கொண்டிருந்தார். உடனே அங்கிருந்த அனைவரும் ஓடிவந்து பினுவை மீட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக பினு உயிர்பிழைத்தார்.

ஒருவேளை பினு கீழே சரிவதை பாபு பார்க்காமல் இருந்திருந்தால் முதல் மாடியில் இருந்து தலைகீழாக விழுந்த பாபுவின் கழுத்து உடைந்தோ அல்லது அவரது தலை சிதறியோ உயிரிழந்திருப்பார். இதனால் கடவுள்போல் வந்து கண்ணிமைக்கும் நொடியில் பினுவை காப்பாற்றிய பாபுவை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.

இந்நிலையில் இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.