இந்தியா

வைரல் வீடியோ: உயிர் போய் உயிர் வந்த தருணம்னா அது இதுதான் போல..! திகிலை கிளப்பிய சிசிடிவி காட்சிகள்..!

Summary:

Kerala man chilling escape caught on video goes viral

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடந்த காட்சி ஒன்று பார்ப்போரை நடுங்கவைக்கும் விதமாக உள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை அடுத்த சவரா என்னும் பகுதியில் உள்ள சாலையில் நபர் ஒருவர் நடந்துசென்றுகொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் இருந்து வாகனம் ஒன்று மிகவும் வேகமாகவும், தாறுமாறாகவும் அவரை கடந்துசெல்கிறது. இந்த கொடூர சம்பவத்தில் அந்த நபர் நூலிழையில் உயிர் பிழைத்துள்ளார்.

சாலையில் செல்லவேண்டிய அந்த வாகனம் சாலை ஓரமாக சென்றுகொண்டிருந்த அந்த நபர் மீது இடிப்பது போல் செல்கிறது. இது எதுவும் அறியாத அந்த நபர் வேகமாக வந்த வாகனம் தன்னை கடந்து சென்றதும் சில வினாடிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் நிலைகுலைந்து நிற்கிறார்.

பின்னர் அங்கும் இங்கும் ஓடும் அவர் நொடி பொழுதில் தான் உயிர் பிழைத்ததை எண்ணி அப்படியே நின்றுவிடுகிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அருகிலிருந்த சிசிடிவி கேமாரவில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைக்கும் விதமாக உள்ளது.


Advertisement