பள்ளி வகுப்பறையில் நடந்த பகீர் சம்பவம்; பாம்பு தீண்டி ஆசிரியை மருத்துவமனையில் அனுமதி.!
கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம், நீலேஸ்வரம் கிராமத்தில் ராஜாஸ் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக வித்யா என்பவர் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று ஆசிரியை தனது வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். பள்ளியில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாட்டமும் நடைபெற்றது. இதனால் பள்ளி வளாகமே உற்சாகத்த்தில் இருந்தது.
கொண்டாட்டத்திற்கு நடுவில் சோகம்
இந்நிலையில், வகுப்பறைக்குள் இருந்த ஆசிரியை சத்யாவை பாம்பு ஒன்று திடீரென வந்து கண்டித்துள்ளது. இதனையடுத்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு கண்ணகாடு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: பாம்புக்கு லிப்-லாக் கொடுத்த சிவா; சிவனிடம் அழைத்துச்சென்ற பாம்பு.. இன்ஸ்ட்டா ரீல்ஸ்க்காக சோகம்.!
தொடர்ந்து அவர் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவமனை நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் சோகம்; கல்லூரி பேராசிரியர் மாரடைப்பால் மரணம்.!