மதுவை பிரிந்து வாழமுடியாமல் தற்கொலைக்கு போகும் குடிமகன்கள்! மதுவழங்க முடிவு செய்த முதல்வர்! நீதிமன்றம் அதிரடி!

மதுவை பிரிந்து வாழமுடியாமல் தற்கொலைக்கு போகும் குடிமகன்கள்! மதுவழங்க முடிவு செய்த முதல்வர்! நீதிமன்றம் அதிரடி!


kerala-high-court-stays-for-drink-sale

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் தீவிரமாக பரவி உலகத்தையே உலுக்கி வருகிறது. ஆனாலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்களை தவிர அணைத்து கடைகளும் மூடப்பட்டன. இந்தநிலையில், மது கிடைக்காத விரக்தியில் கேரளாவில் சிலர்  தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் படி, மதுபானம் வழங்க கேரள அரசு முடிவு செய்தது. 

court

கேரள அரசின் இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், கேரள அரசின் அறிவிப்புக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மருத்துவர் பரிந்துரையின் படி மதுபானம் வழங்க அனுமதி அளித்த அரசின் முடிவுக்கு 3 வாரங்கள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து உயிரை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் மதுபிரியர்களின் செயல் பொதுமக்களை எரிச்சலடையவைத்துள்ளது.