ஊதாரியாக சுற்றிய மகனை கண்டித்ததால் ஆத்திரம்; நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை வெளுத்த மகன்.!



Kerala Father Son Fight 


கேரளா மாநிலத்தில் வசித்து வரும் தந்தை ஒருவர், தனது மகனை நண்பர்களுடன் சேர்ந்து ஊதாரித்தனமாக சுத்துவது தொடர்பாக கண்டித்து இருக்கிறார். இந்த விஷயத்தால் மகன் ஆத்திரம் அடைந்துள்ளார். 

மேலும், அவர் தனது தந்தைக்கு தக்க பாடம் புகட்ட நினைத்து, தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கவும் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

இதையும் படிங்க: "என் போனை கொடு.. இல்ல? வெளிய வச்சி உன்ன போட்டுருவேன்" ஹெட்மாஸ்டரை மிரட்டிய 11th மாணவன்.!

ஏற்கனவே செல்போன் தாக்கம், ரீல்ஸ் மோகம் என இளம் தலைமுறை தறிகெட்ட பாதையில் போதையையும் சேர்த்துக்கொண்டு பயணிக்கிறது. அறிவுரை கூறும் ஆசிரியரின் தொடங்கி பெற்றோர் வரை, அவர்களுக்கு எமனாக தெரிகின்ற மனப்பக்குவம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். - குறள் 67 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். - குறள் 70.

வீடியோ நன்றிதந்தி தொலைக்காட்சி

இதையும் படிங்க: இறந்த பின் திடீரென உயிர்த்தெழுந்த நபர்; ஆம்புலன்சில் ஆடிப்போன உறவினர்கள்.!