இந்தியா

அப்பா, அம்மா 2 பேருக்கும் கொரோனா..! தவித்த 6 மாத குழந்தை..! தற்காலிக அம்மாவான பெண் மருத்துவர்..! குவியும் வாழ்த்துக்கள்..!

Summary:

Kerala doctor adopted 6 months old baby after parents corono test positive

தாய், தந்தை இருவருக்கும் கொரோனா உறுதியான நிலையில், அவர்களது 6 மாத குழந்தையை தற்காலிகமாக தத்தெடுத்து தாய் ஆகியுள்ளார் கேரளாவை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர்.

கேரளாவை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் ஹரியானாவில் செவிலியர்களாக பணியாற்றிவந்த நிலையில் முதலில் கணவனுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மனைவி தனது 2 வயது மகள் மற்றும் 6 மாத ஆண் குழந்தையுடன் சொந்த ஊரான எர்ணாகுளத்திற்கு திரும்பியுள்ளார்.

அங்கு தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கும் சில நாட்களில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், குழந்தைகள் இருவருக்கும் கொரோனா இல்லை என முடிவானநிலையில் தனது 2 வயது மகளை தனது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார் அந்த பெண்.

மேலும், அந்த பெண்ணின் 6 மாத ஆண்குழந்தையை அவரது பெற்றோரால் பார்த்துக்கொள்ள முடியாது என்பதால், குழந்தையைக் கவனித்துக் கொள்ள யாரேனும் தன்னார்வலர் வேண்டும் என எர்ணாகுளம் குழந்தைகள் நல வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

6 மாத குழந்தையை பார்த்துக்கொள்வது மிகவும் சிரமம் என்பதால் யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் மேரி அனிதா (48) என்ற பெண் மருத்துவர் ஒருவர் தற்போது அந்த குழந்தையை கவனித்துக்கொள்ள முன்வந்துள்ளார். அதன்படி குழந்தை தற்காலிகமாக அனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தையும் சில நாட்களிலையே அனிதாவுடன் நெருக்கமாகிவிட்டதாம். அனிதாவும் முழு நேரமும் அந்த குழந்தையுடன்தான் நேரத்தை செலவிடுகிறாராம். அனிதாவின் இந்த செயலுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.


Advertisement