இந்தியா

இறப்பதற்கு முன் மிகவும் சதூர்யமாக செயல்பட்ட விமானி..! ஏராளமான பயணிகள் உயிர்பிழைக்க அதான் காரணம்.!

Summary:

Kerala Air India Express flight accident latest updates

நேற்று கேரளாவில் நடந்த விமான விபத்தில் விமானி உட்பட 19 பேர் உயிரிழந்தனர். எதிர்பாராமல் நடந்த  இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகி கீழே விழுந்ததில் இரண்டு துண்டுகளாக உடைந்து விபத்துக்குள்ளானது. விமானத்தை இயக்கிய விமான சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் விமான ஓடுபாதை சரியாக தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருப்பதாகவும், கடைசி நேரத்தில் விமானி மிகவும் சாதுர்யமாக செயல்பட்டதால் பலர் உயிர்பிழைத்துள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

விமானம் கீழே விழுவதற்கு முன்னர் விமானி விமானத்தின் இயந்திரத்தை நிறுத்தியுள்ளார். இதனால் விமானம் கீழே விழுந்ததும் தீப்பற்றவில்லை. விமானத்தின் இயந்திரத்தை நிறுத்தாமல் இருந்திருந்தால் விமானத்தின் எரிபொருள் டாங்க் வெடித்து விமானம் தீ பற்றி எரித்திருக்கக்கூடும் எனவும், பலர் இதனால் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும், விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் உயிரிழப்புகள் தவிற்கப்பட்டுள்ளது என  வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 


Advertisement