காணாமல் போன மாடுகள்.. தேடி அலைந்த பெண்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.! மீட்பு குழுவினர் திகைப்பு.!



Kerala 3 women missed and found by next day

பழங்குடியின மக்கள் :

கேரள மாநிலத்தின் குட்டம்புழா கிராமத்தில் அத்திக்களம் என்ற காட்டுப்பகுதி இருக்கிறது. இந்த கிராமம் இயற்கையாகவே அடர்ந்த காடுகளால் சூழப்பட்டது. கிராமத்தை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் இருக்கின்றன. இந்த பகுதியில் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதை தான் தொழிலாக கொண்டுள்ளனர்.

காணாமல் போன மாடுகள் :

இந்த பகுதியில் வசித்து வரும் டார்லி, மாயா ஜெயன் மற்றும் பார் குட்டி  மற்றும்  என்ற 3 பெண்கள் சம்பவ தினத்திலும் வழக்கம் போல மாடுகளை மேய்க்க சென்றுள்ளனர். அப்போது அவர்களது மாடு காணாமல் போயுள்ளது. இதன் காரணமாக, அந்த பெண்கள் பதறியடித்து மாடுகளை பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனர். ஆனால், எங்கு தேடியும் மாடுகள் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: கேரளாவில் பயங்கரம்... பெண் போலீஸ் வெட்டி கொலை.!! கணவன் தலைமறைவு.!!

மீட்பு குழுவினர் களமிறக்கம் :

எனவே அத்திக்களம் காட்டிற்குள் அவை சென்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவர்கள் அங்கு சென்று தேடியுள்ளனர். மதிய வேலை 3 மணிக்கு அவர்கள் அந்த காட்டிற்குள் நுழைந்தனர்.  ஆனால், வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன உறவினர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தங்களது மீட்பு பணியை துவங்கினர். அடர்ந்த காட்டிற்குள் அவர்களை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக அமையவில்லை. மிகப்பெரிய குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறுநாள் காலை 2 மணி வரை இந்த குழு நான்காக பிரிந்து தீவிரமாக தேடியது.

KERALA

மீட்கப்பட்ட பெண்கள் :

இரண்டு குழுக்கள் தங்களால் பாதிக்கு மேல் முடியாது என்று திரும்பின. மற்ற இரண்டு குழுக்களும் விடிய விடிய அந்த பெண்களை தேடியும் கிடைக்கவில்லை. வியாழக்கிழமை துவங்கிய இந்த தேடுதல் வேட்டை வெள்ளிக்கிழமை காலை வரை தொடர்ந்தது. ஆளில்லா விமானம், தெர்மல் ஸ்கேனிங் கருவி உள்ளிட்ட பல உபகரணங்களை வைத்து தேடுதல் பணி நடைபெற்றது. இந்த நிலையில், காலை 7:30 மணி அளவில் அந்த பெண்கள் மீட்கப்பட்டனர்.

அதிரடி ட்விஸ்ட் :

அவர்கள் காட்டிற்குள் சென்றபோது யானைகள் துரத்தியதால் ஓடி வந்து அவர்கள் ஒளிந்து கொண்டனர்.  யாராவது தங்களை காப்பாற்றுவார்கள் என்று அங்கேயே அவர்கள் இருந்ததாகவும் மீட்பு குழுவினர் அவர்களை தேடி கண்டறிந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் திருப்பம் என்னவென்றால் இவர்கள் தேடிச் சென்ற மாடுகள் வியாழக்கிழமை மாலையே மேய்ந்து விட்டு வீட்டிற்கு வந்துவிட்டது தான்.

இதையும் படிங்க: அடிதடி சண்டைக்கு மத்தியில் மனிதாபிமானம்; ஆம்புலன்சுக்கு வழிவிட்டு நெகிழ்ச்சி செயல்.. குவியும் பாராட்டு.!