இந்தியா

தனது புற்றுநோய் சிகிச்சைக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை, மக்களுக்கு தானமாக வழங்கிய பிரபல நடிகை!!

Summary:

keala actress donate money to flood affected people

கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. மேலும் இத்தகைய கனமழையால் கடந்த ஆண்டு போலவே பெரும் வெள்ளம் மற்றும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கு வாழ்ந்து வரும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.பலர் மாயமாகியுள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் உண்ண உணவின்றி இருக்க இடமின்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய படம்

 இந்நிலையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேரள முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் மலையாள தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சரண்யா தனது புற்றுநோய் சிகிச்சைக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தின் ஒரு பங்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு,  உயிருக்கு போராடும் நிலையிலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னால் முடிந்த உதவியை செய்ய தான் சேர்ந்து வைத்திருந்த பணத்தை தானமாக கொடுத்த   அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
 


Advertisement