இந்தியா

மகப்பேறு மரணங்களில் மாநிலம் முதலிடம்... ஊட்டச்சத்து, இரும்புசத்து குறைபாடால் சோகம்..!

Summary:

மகப்பேறு மரணங்களில் மாநிலம் முதலிடம்... ஊட்டச்சத்து, இரும்புசத்து குறைபாடால் சோகம்..!

இந்திய மாதிரி பதிவுமுறை அமைப்பு, இந்தியாவில் நடைபெற்ற மகப்பேறு மரணம் தொடர்பாக ஆய்வுகளை நடத்தியது. இதன்படி, கடந்த 2017 - 2019 வருடம் வரையிலான மகப்பேறு மரணங்கள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மார்ச் மாதம் வெளியானது.

கர்நாடக மாநிலத்தில் அதிகபட்சமாக மகப்பேறு மரணங்கள் ஒரு இலட்சத்திற்கு 83 என்ற வீதத்தில் இருந்துள்ளது. இதில், பெண்கள் பிரசவத்தின்போது அல்லது கர்ப்ப காலத்தில் இறந்துள்ளனர். கேரளாவில் 30 பேரும், தெலுங்கானாவில் 56 பேரும், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் தலா 58 பேரும் என மகப்பேறு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் மகப்பேறு மரணம் தொடர்பாக உப்பள்ளி மருத்துவக்கல்லூரி மகப்பேறு நிபுணர் தெரிவிக்கையில், "இம்மாநிலத்தில் 45.7 % பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. பலரும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44.7 % பேர் இரும்பு சத்து மாத்திரை சாப்பிடுகிறார்கள். இவ்வாறான குறைபாடு காரணமாக மகப்பேறு மரணம் நிகழ்கிறது" என்று கூறினார்.


Advertisement