இந்தியா

போலீஸ் சேசிங்.. திரைப்பட பாணியில் தப்பிச்செல்ல முயன்று இரயிலில் அடிபட்டு ரௌடி சாவு..!

Summary:

போலீஸ் சேசிங்.. திரைப்பட பாணியில் தப்பிச்செல்ல முயன்று இரயிலில் அடிபட்டு ரௌடி சாவு..!

கார் சேஸிங்கில் திரைப்பட பாணியில் ரயில்வே கேட் முன்பு சிக்கிய ரௌடி, தப்பி செல்ல முயன்று இரயிலில் அடிபட்டு உயிரிழந்தான்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், சுங்கதக்கட்டே கிராமத்தில் வசித்து வருபவர் திலீப் (வயது 28). இவர் ரௌடி போல வலம்வந்த நிலையில், மாதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்தில் இவனின் பெயர் முக்கிய ரவுடி பட்டியலில் உள்ளது. நேற்று ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பசவனப்புரா பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

பெங்களுர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அண்டைப்பெற்ற சோதனையில், ரௌடி திலீப் மைசூரில் இருந்து பெங்களூர் நோக்கி வந்துள்ளான். இவனுடன் 3 கூட்டாளிகளும் பயணம் செய்த நிலையில், அதிகாரிகள் இருப்பதை கவனித்த இவர்கள் காரை திருப்பி தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். 

இவர்களை கவனித்த காவல் துறையினரும் தங்களின் வாகனத்தில் எதிரிகளை துரத்தி செல்ல, பசவனப்புரா இரயில்வே கேட்டில் இரயில் வருகையின் போது சிக்கியுள்ளனர். இதனையடுத்து, கூட்டாளிகளை கைதாகிவிட அறிவுறுத்திய திலீப், காரில் இருந்து இறங்கி இரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி செய்துள்ளார். 

அப்போது, அவ்வழியே வந்த இரயில் மீது மோதி நிகழ்விடத்திலேயே படுகாயமடைந்து பலியாகினார். நிகழ்விடத்தில் இருந்த காவல் துறையினர், இரயில்வே காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். திலீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, அவனின் கூட்டாளிகளை கைது செய்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.


Advertisement