கொடூர விபத்து.. நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்.. சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பலி..

கொடூர விபத்து.. நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்.. சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பலி..


Karnataka mini bus and lorry accident

கர்நாடகா மாநிலத்தில் சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவனகரே பகுதியிலிருந்து சுற்றுலா வேன் ஒன்றில் 17 பேர் கோவா நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் சென்ற வேன் கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரியுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் வேனும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் அதிவேகமாக மோதிக்கொண்டதில் இரண்டு வாகனமும் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலையே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில்லையே உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து இந்திய பிரதமர் மோடி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த விபத்தில் பல உயிர்களை இழந்திருப்பது நினைத்து வருத்தமாக உள்ளது, உயிர்களை இழந்த குடும்பங்கள் நினைத்து கவலையாக உள்ளது எனவும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனவும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.