ரீல்ஸ்-க்கு அடிமையான மனைவி; ஊரார் சொல்லுக்கு பயந்து கணவன் தற்கொலை.!

ரீல்ஸ்-க்கு அடிமையான மனைவி; ஊரார் சொல்லுக்கு பயந்து கணவன் தற்கொலை.!


Karnataka Man Suicide After Wife Reels Addict   

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹானுர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் கூலித்தொழிலாளி ஆவார். தான் கூலித்தொழிலாளியாக பணியாற்றினாலும், தனது மனைவிக்கு ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கி பரிசளித்து இருக்கிறார். 

ஸ்மார்ட்போன் வாங்கி உபயோகம் செய்த மனைவி, பின்னாளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் விடியோவுக்கு அடிமையாகி, தொடர்ந்து அதில் ரீல்ஸ் பதிவேற்றி வந்துள்ளார். இதனால் குடும்பத்தையும் சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார். 

மனைவியின் நடவடிக்கையை குமார் கண்டித்தும் பலனில்ல்லை. ஒருகட்டத்தில் இருவருக்கும் சண்டை என வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுள்ள்ளது. இதனால் மனமுடைந்துபோன குமார், ஊராரின் கிண்டல் போன்ற பிரச்சனை காரணமாகவும் துடித்துள்ளார். 

ஒருகட்டத்தில் ஊரான் சொல்லுக்கு பயந்த குமார், மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.