மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
தலைவலிக்கு சிறப்பு பூஜை.. தலையிலேயே கரும்பால் அடி.. துடிதுடித்து உயிரிழந்த பெண்..!
சென்னராயப்பட்டானாவை சார்ந்த பெண் தலைவலி தீர பூசாரி சொன்ன சிறப்பு பூஜை செய்த நிலையில், பூஜையின் முடிவில் பெண்ணை கரும்பால் தலையில் அடித்த காரணத்தால் பரிதாபமாக பலியாகினார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டானா நகரை சார்ந்தவர் பார்வதி (வயது 47). இவர் கடந்த சில நாட்களாகவே தலைவலி மற்றும் உடல்நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை. பின்னர், கோவிலுக்கு சென்று பூஜை செய்துள்ளார்.
இதன்போது, பூசாரி ஒருவர் சிறப்பு பூஜை செய்தால் தலைவலி மற்றும் உடல்நலக்குறைவு குணமாகிவிடும் என்று கூறவே, இதனை நம்பிய பார்வதி பூசாரி கூறியவாறு ஹரியப்பட்டானா பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பூசாரியை சந்தித்து இருக்கிறார். பூசாரி கூறியவாறு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பூஜையின் முடிவில் பூசாரி கரும்பால் பார்வதியின் தலையில் அடித்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த பார்வதி, சிறிது நேரத்தில் வலி தாங்க முடியாமல் அலறித்துடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு பயந்த பூசாரி அங்கிருந்து தப்பி செல்லவே, அங்கிருந்த நபர்கள் மற்றும் பார்வதியின் குடும்பத்தினர், பார்வதியை மீட்டு சிகிச்சைக்காக ஹாசனின் உள்ள ஹிம்ஸ் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். ஆனால், பார்வதி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஷ்ரவணபெலகோலா காவல் துறையினர், பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள பூசாரியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.