பைக் - லாரி மோதல்.. இரட்டைக்குழந்தைகள், தாய் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

பைக் - லாரி மோதல்.. இரட்டைக்குழந்தைகள், தாய் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!


Karnataka Hassan Twin Baby and Mother Died Lorry Two Wheler Crash

குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில், இரட்டை குழந்தைகள் மற்றும் குழந்தையின் தாய் பலியானார். தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம், கசனஹள்ளி பகுதியை சார்ந்தவர் சிவானந்த். இவரது மனைவி ஜோதி. இந்த தம்பதிகள் இருவருக்கும் பிரகதி என்ற மகளும், பிரணவ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டைக்குழந்தைகள், 3 வயது ஆகிறது. 

இந்நிலையில், குழந்தைகள் இருவருக்கும் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு ஏற்படவே, அதற்கு மருத்துவமனை செல்ல தம்பதிகள் இருவரும் இருசக்கர வாகனத்துடன் புறப்பட்டு சென்றுள்ளனர். 

இவர்கள் ஹாசன் புறநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டு இருக்கையில், அவ்வழியாக வந்த லாரி மோதி வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். இந்த கோர விபத்தில், பெற்றோருடன் பயணித்த இரட்டை குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகின. 

karnataka

மேலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தாய் ஜோதியும் உயிரிழந்தார். படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய சிவானந்த் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஹாசன் நகர காவல் துறையினர், மதுபோதையில் ஓட்டுநர் லாரியை இயக்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், விபத்து நடந்தும் வாகனம் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளது.