கர்ப்பமாகி தாய் வீட்டிற்கு சென்ற மனைவிக்கு திருமணம்.. ஆடிப்போன கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!Karnataka Devanagari Women Cheated 4 Youths 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த் (வயது 35). அங்குள்ள மாண்டியா மாவட்டம் நரஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் சினேகா (வயது 30). இவர்கள் இருவருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் நட்பாக பேசி, பின் செல்போனில் நம்பரை பரிமாறிக்கொண்டுள்ளனர். நட்பாக பேசி வந்த இருவரும் காதல் வயப்படவே, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு பிரசாந்த்திடம், மனைவி சினேகா தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும், தாய் வீட்டிற்கு சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தாய் வீட்டிற்கு சென்றவர் மீண்டும் வராமல், செல்போனும் இயங்காமல் இருந்ததால் பிரசாந்த் அதிர்ச்சியடைந்தார். 

மனைவி மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் பெண்ணை தேடி வந்தனர். இதற்கிடையில், தனது மனைவி வேறொரு இளைஞருடன் திருமண கோலத்தில் இருந்த புகைப்படம் பிரசாந்துக்கு கிடைத்துள்ளது.

பின், சினேகா தொடர்பாக விசாரித்தபோது ஏற்கனவே அவருக்கு 2 முறை திருமணமானதும், மூன்றாவதாக பிரசாந்தை திருமணம் செய்துவிட்டு, தற்போது நான்காவதாக வேறொரு இளைஞரை திருமணம் செய்ததும் உறுதியாகியுள்ளது.

இதனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, அதிகாரிகள் சினேகாவை தற்போது தேடி வருகின்றனர். காதல் ராணி பிடிபட்டால் மட்டுமே, அவர் இதுபோல எத்தனை இளைஞர்களை ஏமாற்றினார் என்பது தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.